ஃப்ரைடு மோமோஸ்

எப்படிச் செய்வது?

மாவிற்கு கொடுத்த பொருட்கள் அனைத் தையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். கோஸ், வெங்காயம்  சேர்த்து காட்டன் துணியில் போட்டு பிழிந்து எடுத்துக் கொள்ளவும். பின்பு கொடுத்த பூரணத்திற்கான பொருட்களை சேர்த்து ஒன்றாக கலந்து  கொள்ளவும். பிசைந்த மாவை நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக்கி சின்னச் சின்ன சப்பாத்திகளாகத் தேய்த்து பூரணத்தை வைத்து மூடி இட்லி  தட்டில் வேகவைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வேகவைத்த மோமோஸ்களை பொரித்தெடுத்து சாஸுடன் பரிமாறவும்.