×

108 ஆம்புலன்சில் மரம் அறுக்கும் இயந்திரம்: விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் மரம் அறுக்கும் இயந்திரம் எடுத்து செல்லப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து டிஎம்.எஸ்., வளாகத்தில் உள்ள, 108 ஆம்புலன்ஸ் மாநில கட்டுப்பாடு அறையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி: நிவர் புயலால் ஏற்படும் அவசரகால தேவைக்காக, 465 ஆம்புலன்ஸ்கள் பிரத்யேகமாக தயார் நிலையில் உள்ளன. கடலோர பகுதிகளில், 30 ஆம்புலன்ஸ்கள் உள்ளன.

நோயாளிகளை காப்பதற்கு மட்டுமில்லாமல் போகும் வழியில் மரங்கள் விழுந்திருந்தால் அவற்றை அப்புறப்படுத்துவதற்கு தேவையான மரம் அறுக்கும் இயந்திரம், 108 ஆம்புலன்ஸில் எடுத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. தற்போது வரை, 108 மாநில கட்டுப்பாட்டு அறைக்கு புயல் சார்ந்த அழைப்புகள் குறைவாகவே வந்துள்ளது. மழை நேரத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது சற்று சவாலான விஷயமாகும். எனினும், சமூக இடைவெளியை பின்பற்றி, முககவசம் கட்டாயம் அணிந்து நோய் பரவலை தடுக்க வேண்டும்.



Tags : Ambulance sawmill ,Vijayabaskar ,interview , 108 Ambulance sawmill: Vijayabaskar interview
× RELATED அதிமுக மாஜி அமைச்சரின் கல்லூரியில் மாணவன் சாவு