குயில் தோட்டம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் பரபரப்பு: 3 வது மாடி பால்கனி இடிந்து விழுந்தது :ஆட்கள் இல்லாததால் உயிர்சேதம் தவிர்ப்பு

சென்னை:  சென்னை மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலை அருகே உள்ள குயில் தோட்டம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் 2000 ஆயிரம் குடும்பத்தினர் வசிக்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த குடியிருப்பு தற்போது சிதலமடைந்துள்ளது. இதனால் அடிக்கடி சிறு சிறு விபத்துகள் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ‘நிவர்’ புயல் காரணமாக கன மழை பெய்து வருகிறது. இதனால் குடிசைமாற்று வாரிய குடியிருப்பின் கட்டிடத்தின் பல இடங்களில் மழை நீர் தேங்கி ஒழுகுகிறது. அந்த வகையில் ‘ஜி பிளாக்கின் மூன்றாவது மாடி பால்கனி நேற்று அதிகாலை திடீரென மழை காரணமாக பெயர்ந்து விழுந்தது.

இந்த விபத்தில் அங்கு வசிக்கும் மக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்ைல. யாரும் கீழே இல்லாத காரணத்தால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. தகவல் அறிந்த மயிலாப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் விபத்து நடந்த பகுதியில் நேரில் ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது ேநரம் குயில் தோட்டம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: