×

பேரறிவாளனுக்கு நரம்பியல் சிகிச்சை

ஜோலார்பேட்டை: கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு நரம்பியல் சம்பந்தமான சிகிச்சை அளிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 27 ஆண்டுகளாக பேரறிவாளன் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், சிறையில் இருந்து கடந்த மாதம் 9ம் தேதி முதல் பரோலில் ஜோலார்பேட்டையில் சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில, மருத்துவரின் ஆலோசனைப்படி பேரறிவாளனுக்கு நரம்பியல் சம்பந்தமாக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார்  மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நேற்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச்செல்லப்பட்டார்.

கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு சென்று சேர்ந்ததும், அங்குள்ள நரம்பியல் சிறப்பு நிபுணர்  பேரறிவாளனுக்கு சிகிச்சை அளித்தார். அங்கு சிகிச்சை முடிந்ததும் அதே பகுதியில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்று அங்கு உடல்நிலை பாதித்து தங்கியுள்ள தனது தந்தை குயில்தாசனை சந்தித்து நலம் விசாரித்தார். அதன்பின்னர் மீண்டும் நேற்று மாலை ஜோலார்பேட்டைக்கு திரும்பினார்.


Tags : Neurological treatment for epilepsy
× RELATED அனைவரையும் அழகாக்கும் காஸ்மெடிக் சிகிச்சை..!