கேரள அரசின் அவசர சட்டம் முறைப்படி வாபஸ்: கவர்னர் கையெழுத்திட்டார்

திருவனந்தபுரம்: சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான ஆபாச கருத்துக்கள் மற்றும் தனிநபருக்கு எதிராக மிரட்டல் விடுப்பவர்களுக்கு எதிராக கேரளாவில் கடந்த சிலநாட்களுக்கு முன் அவசர சட்டம் கொண்டுரவப்பட்டது. இதன்படி குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும். இந்த புதிய சட்டத்தின்படி பத்திரிகை மற்றும் டிவிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க முடியும். இந்த சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில் இந்த சட்டத்திற்கு கேளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தேசிய அளவிலும் பல தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு ெதரிவித்தனர்.

இதையடுத்து இந்த சட்டத்தை வாபஸ் பெறுவதாக முதல்வர் பினராய் விஜயன் கூறினார். இந்த சட்டத்தில் கவர்னர் கையெழுத்து போட்டதால் சட்டத்தை வாபஸ் பெறும்போதும் கவர்னர் கையெழுத்து போட வேண்டும். இதையடுத்து இந்த அவசர சட்ட வாபஸ் மசோதா நேற்று கவர்னரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை பரிசீலித்த கவர்னர் ஆரிப் முகமதுகான் கையெழுத்து போட்டார். இதையடுத்து சட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Related Stories:

>