×

கேரளாவில் சாதாரண பஸ்களிலும் முன்பதிவு வசதி

திருவனந்தபுரம்: கேரளாவில் சாதாரண அரசு பஸ்களிலும் இருக்கை முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து கேஎஸ்ஆர்டிசி கடும்  வருவாய் இழப்பை சந்தித்து வருகிறது. இந்நிலையில், கடும் கடன் சுமைக்கு தள்ளப்பட்டுள்ள கேஎஸ்ஆர்டிசி.க்கு உதவிடும் வகையில் அரசு சிறப்பு நிதியும்  ஒதுக்கி வந்தது. இந்த நிலையில் நிதி  நெருக்கடியை சமாளிக்க கேஎஸ்ஆர்டிசி பல செலவுகளை குறைத்து, வருமானத்தை  அதிகரிக்க முயற்சித்தது. இதன் ஒருபகுதியாக  கேஎஸ்ஆர்டிசியின் சாதாரண பஸ்களிலும் வழக்கமாக சென்றுவரும் பயணிகளுக்கு  இருக்கை முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக கண்டக்டர்  5க்கான கூப்பனை வழங்குவார். காலையில் பஸ்களில் ஏறும் பயணிகள் கண்டக்டரிடம்  இருந்து இந்த கூப்பனை 5 கொடுத்து வாங்கி கொள்ளலாம். பின்னர் அவர்கள்  மாலையில் திரும்பும் போது இதை பயன்படுத்தி ெகாள்ளலாம்.


Tags : Booking facility ,Kerala , Booking facility in normal buses in Kerala
× RELATED காலாவதியாகி பல ஆண்டுகளாச்சு தள்ளுவண்டியாக மாறிய விருதுநகர் அரசு பஸ்கள்