×

சொல்லிட்டாங்க...

கொரோனா தாக்கம் முழுவதுமாக குறையும் வரை இக்கல்வியாண்டில் கல்லூரி வகுப்புகள் அனைத்தும் ஆன்லைனிலேயே நடைபெறும். - உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்

இயற்கை பேரழிவு ஏற்படும்போது மத்தியஅரசு மாநிலங்களுக்கு உதவ வேண்டும். எந்த கட்சி ஆட்சி செய்கிறது என்று அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்க கூடாது. - மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார்

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், கடந்த காலத்தில் தாக்கிய கஜா புயலின் பாதிப்பிலிருந்து தமிழகஅரசு பாடம் கற்றுக்கொண்டதா என்னும் கேள்வி எழுகிறது. - விசிக தலைவர் திருமாவளவன்

அதிமுக-பாஜ கூட்டணியில் பாஜவுக்கு 40 தொகுதிகள் கேட்கப்பட்டது என்பது ஒரு  யூகம்தான். எத்தனை இடங்கள் கேட்பது என இப்போது ஜாதகம் பார்க்க தேவையில்லை. - பாஜ தலைவர் எல்.முருகன்

Tags : All college classes will be held online this school year until the Corona impact is fully mitigated. - Minister of Higher Education KP Anpalagan
× RELATED புதுச்சேரியில் இன்று முதல் அனைத்து...