×

லங்கா பிரிமியர் லீக்: டி20 தொடர் இன்று தொடக்கம்

கொழும்பு: லங்கா பிரிமியர் லீக் டி20 தொடர், இலங்கையின் அம்பாந்தோட்டை (ஹம்பண்டோட்டா) நகரில் இன்று தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் கொழும்பு கிங்ஸ் - கண்டி டஸ்கர்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் தொடரைப் போல லங்கா பிரிமியர் லீக் டி20 போட்டி இலங்கையில் நடத்தப்படுகிறது. இதில் கொழும்பு கிங்ஸ், கண்டி டஸ்கர்ஸ், காலே கிளேடியேட்டர்ஸ், ஜாப்னா ஸ்டாலியன்ஸ், தம்புல்ல வைக்கிங் ஆகிய 5 அணிகள் களமிறங்குகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற 4 அணிகளுடன் தலா 2 முறை லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. இந்த சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். முதல் அரை இறுதி டிச. 13ம் தேதியும், இரண்டாவது அரை இறுதி டிச. 14ம் தேதியும் நடக்க உள்ளன. சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான இறுதிப்போட்டி டிச.16 ம் தேதி நடத்தப்படுகிறது.

அனைத்து போட்டிகளும அம்பாந்தோட்டை, சூரியவிவாவில் உள்ள மகிந்தா ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளன. போட்டிகள் பிற்பகல் 3.30, இரவு 7.30 மற்றும் 8 மணிக்கு தொடங்குகின்றன. சோனி சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இன்று நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் கொழும்பு கிங்ஸ் - கண்டி டஸ்கர்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஏஞ்சலோ மேத்யூஸ், ஷாகித் அப்ரிடி, இர்பான் பதான், பிரெண்டன் டெய்லர், பால் ஸ்டர்லிங், ஹசரதுல்லா ஸஸாய், திசாரா பெரேரா உட்பட முன்னணி வீரர்களும் முன்னாள் நட்சத்திரங்களும் களமிறங்கும் இந்த தொடர் கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொழும்பு கிங்ஸ்:

ஏஞ்சலோ மேத்யூஸ் (கேப்டன்), அமைலா அபான்சோ, டேனியல் பெல், துஷ்மந்த சமீரா, தினேஷ் சண்டிமால், திக்ஷிலா டி சில்வா, லாரி எவன்ஸ், மன்பிரீத் கோனி, லாகிரு உதாரா, கரிம் சாதிக், தரிண்டு கவுஷல், நவோத் பரணவிதனா, கலனா பெரேரா, தம்மிகா பிரசாத், அஷான் பிரியாஞ்சன், குவாயிஸ் அகமது, ஹிமேஷ் ராமநாயகே, தரிண்டு ரத்னாயகே, ரவீந்தர்பால் சிங், ஆந்த்ரே ரஸ்ஸல், இசுரு உடனா, ஜெப்ரி வாண்டர்சே. கண்டி டஸ்கர்ஸ்: குசால் பெரேரா (கேப்டன்), கவிஷ்கா அஞ்சுலா, சமிகரா எதிரிசிங்கே, லசித் எம்புல்டெனியா, நுவன் பிரதீப், நிஷான் மதுஷ்கா, விஷ்வா பெர்னாண்டோ, அசெலா குணரத்னே, இஷான் ஜெயரத்னே, கெவின் கொத்திகோடா, குசால் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், நவீன் உல் ஹக், முனாப் பட்டேல், இர்பான் பதான், தில்ருவன் பெரேரா, பிரியமால் பெரேரா, சீக்குகே பிரசன்னா, ரகமதுல்லா குர்பாஸ், லாகிரு சமரகூன், சோகைல் தன்வீர், பிரெண்டன் டெய்லர்.

Tags : Lanka Premier League , Lanka Premier League: T20 series starts today
× RELATED சையத் முஷ்டாக் அலி டிராபி: டி20 தொடர் இன்று தொடக்கம்