சமஸ்கிருதத்தில் பதவியேற்ற இந்திய வம்சாவளி எம்.பி.

மெல்போர்ன்: இமாச்சால பிரதேச மாநிலம், ஹமிர்பூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் டாக்டர் கவுரவ் சர்மா. ஆக்லாந்தில் எம்பிபிஎஸ் முடித்த இவர், வாஷிங்டனில் எம்பிஏ படிப்பை முடித்தார்.  பின்னர், நியூசிலாந்து நாட்டின் மேற்கு ஹாமில்டனில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் தற்போது தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு. அத்தொகுதி எம்பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தனது பதவியேற்பின் போது, நியூசிலாந்தின் பூர்வீக மொழியான மாவோரியிலும், இந்திய மொழியான சமஸ்கிருதத்திலும் பதவி பிரமாணம் எடுத்து கொண்டார், என்று நியூசிலாந்து, சமோவாவுக்கான இந்திய தூதர் முகேஷ் பர்தேஷி டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, ‘இந்தியில் ஏன் பதவிப் பிரமாணம் எடுத்து கொள்ளவில்லை?’ என்ற டிவிட்டர் கேள்விக்கு கவுரவ் அளித்துள்ள பதிலில், `உண்மையை சொல்ல வேண்டும் என்றால், தாய்மொழியான பகாரி அல்லது பஞ்சாபி மொழியில் எடுப்பதா? என்ற குழப்பம் இருந்தது. அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பது என்பது முடியாது. எனவே, அனைத்து இந்திய மொழிகளுக்கும் மரியாதை அளிக்கும் வகையில் சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம் எடுத்து கொண்டேன், என்று கூறியுள்ளார்.

Related Stories: