×

ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்கு எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஓய்வு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்கில் அனைத்து தரப்பும்  எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகங்கள்  குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை தமிழக  அரசு அமைத்துள்ளது. ஆனால், இந்த ஆணையத்தின் விசாரணை மாறுபட்ட கோணத்தில் செல்வதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கை,  ‘ மனுவில் முகாந்திரம் இல்லை’ எனக்கூறி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து,  உச்ச நீதிமன்றத்தில்  மருத்துவமனை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு,  நீதிபதிகள் அப்துல் நசீர் மற்றும் சஞ்ஜீவ் கண்ணா ஆகியோர்  அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பும்  எழுத்துப்பூர்வ வாதங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்,’ என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை  டிசம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.Tags : Arumugasami Commission ,Supreme Court , The case relating to the Arumugasami Commission should file written arguments: Supreme Court order
× RELATED வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை...