தருண் கோகாய் எனது குருநாதர்: ராகுல் காந்தி உருக்கம்

கவுகாத்தி: ‘சமீபத்தில் மறைந்த அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய், எனது குருநாததர போன்றவர்’ என ராகுல் காந்தி உருக்கமாகக் கூறியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், அசாம் மாநில முன்னாள் முதல்வருமான தருண் கோகாய், கடந்த திங்கட்கிழமை கொரோனா தொற்றால் காலமானார். அவரது  இறுதிச்சடங்கு நேற்று நடந்தது. இதில், அஞ்சலி செலுத்துவதற்காக சிறப்பு விமானத்தில் அசாம் சென்றார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. அஞ்சலி செலுத்திய பிறகு ராகுல்  கூறுகையில், ‘‘அசாம் மாநில தலைவர் மட்டுமே அல்ல. தேசிய அரசியலிலும் கோகாய் முக்கியத்துவம் வாய்ந்தவர். அவருடன் நிறைய நேரம் செலவிட்டுள்ளேன். எனக்கு பல ஆலோசனைகளை கூறியுள்ளார். பல விஷயங்கள் கற்றுக் கொண்டிருக்கிறேன். எனக்கு வழிகாட்டிய ஆசிரியராகவும், குருநாதராகவும் அவர் இருந்தார். அவரது மரணம் எனக்குத் தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பு’’ என்றார்.

Related Stories:

>