நிவர் புயல் இன்னும் 1 மணி நேரத்தில் கரையை கடக்க தொடங்கும்; தேசிய வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: நிவர் புயல்  இன்னும் 1 மணி நேரத்தில் கரையை கடக்க தொடங்கும் என தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் இருந்து 55 கி.மீ தூரத்திலும், கடலூரில் இருந்து 60 கி.மீ தூரத்திலும், சென்னையில் இருந்து 130 கி.மீ தூரத்திலும் மையம் கொண்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று இரவு காரைக்கால்- மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலால் நேற்று முதல் சென்னையில் கனமழை பெய்துவருகிறது.  அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில் புறநகர் பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. முட்டி அளவுக்கு தண்ணீரால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

குடிதண்ணீர் எது சாக்கடை தண்ணீர் எது என தெரியாத அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். வெள்ள நீர் அதிகமாக அதிகமாக மக்கள் அப்பகுதியை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நிவர் புயல்  இன்னும் 1 மணி நேரத்தில் கரையை கடக்க தொடங்கும் என தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் இருந்து 55 கி.மீ தூரத்திலும், கடலூரில் இருந்து 60 கி.மீ தூரத்திலும், சென்னையில் இருந்து 130 கி.மீ தூரத்திலும் மையம் கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: