×

வேகத்தை குறைத்த நிவர்...!! அதிகாலை 2 மணிக்கு பிறகே புயல் கரையை கடக்கும்; தேசிய மீட்புப் படை தலைவர் பேட்டி

சென்னை: அதிகாலை 2 மணிக்கு பிறகு நிவர் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய மீட்ப்புப்படை தலைவர் பிரதான் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் 1000 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று இரவு காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் அருகே கரையைக்கடக்கவிருக்கிறது.

தற்போது புயலானது கடலூரில் இருந்து 110 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 120 கிமீ தொலைவிலும், சென்னையிருந்து 185 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. புயல் எதிரொலியால் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் ஏரிகள் நிரம்பிவழிகின்றன. இதனால் கரையோர பகுதி மக்கள் அப்புறப்படுத்தும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும்பணியில் மீட்புப்படையினர் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். நிவர் புயல் நகரும் வேகம் குறைந்தது.

சென்னையில் இருந்து 185 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் நள்ளிரவு 2 மணிக்கு மேல் நிவர் புயல் கரையை கடக்கவுள்ளதாக பேரிடர் மீட்புப்படை இயக்குநர் தெரிவித்துள்ளார். நிவர் புயலின் நகரும் வேகம் 16 கி.மீ. வேகத்தில் இருந்து 13 கி.மீ ஆக குறைந்துள்ளது. வடமேற்கு திசையை நோக்கி நிவர் புயல் நகர்ந்து வருகிறது. சென்னையில் தற்போது 20 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது எனவும் கூறிஉள்ளார்.

Tags : Nivar ,coast ,storm ,Interview ,National Rescue Force Leader , Nivar who slowed down ... !! The storm will cross the coast just after 2 p.m. Interview with National Rescue Force Leader
× RELATED சாலையின் இருபுறமும் மணலால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்