×

பாஜ கட்டுப்பாட்டில் அறநிலையத் துறை: முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி குற்றச்சாட்டு

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி நிருபர்களிடம் நேற்று கூறுகையில், ‘‘வேல் யாத்திரை என்பது பாஜவின் மதவெறி யாத்திரை. தமிழக மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் யாத்திரை.  நீதிமன்றம் தடை செய்த யாத்திரையை மாநில அரசு கண்டுகொள்ளாமல் அனுமதிக்கிறது. காலையில் யாத்திரை, மாலையில் கைது என்று போலி நாடகம் நடக்கிறது. பழநியில் பக்தர்களுக்கு அனுமதிக்கப்படாத ரோப்கார், வின்ச் ஆகியவை பாரதிய ஜனதா கட்சியனருக்காக இயக்கப்படுகிறது. பாஜ கட்டுப்பாட்டில் அறநிலையத் துறை உள்ளது என்றே தோன்றுகிறது.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பிரசாரம் செய்யும்போது கைது செய்கின்றனர். இது ஜனநாயக விரோத நடவடிக்கை. பாஜ தலைவர் கைது செய்யப்பட்டவுடன் விடுவிக்கப்படுகிறார். குஷ்பூ கைது செய்யப்பட்டவுடன் விடுவிக்கப்படுகிறார். ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்படுகிறார்கள். ஆனால் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட பின்னர் இரவு 12 மணிக்கு மேல் விடுவிக்கப்படுகிறார். இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்’’ என்றார்.


Tags : BJP ,department ,MLA ,Balabharati , BJP-controlled charitable department: Former MLA Balabharati accused
× RELATED புதுச்சேரி பாஜ நியமன எம்எல்ஏ சங்கர் மாரடைப்பால் மரணம்