×

ஆஸ்திரேலிய முக்கிய பேட்ஸ்மேன் ஸ்டீவன் ஸ்மித் விக்கெட்டை எடுக்க டெண்டுல்கர் டிப்ஸ்

மும்பை: ஆஸ்திரேலியா சென்றுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள், 3 டி.20 மற்றும்4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.முதலில் ஒருநாள் தொடர் நடக்கிறது. நாளை மறுநாள் சிட்னியில் முதல் ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. சமபலம் கொண்ட இரு அணிகள் இடையேயான இந்த தொடருக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். கடந்த முறை இந்தியா தொடரை வென்ற நிலையில் இந்ததுறை ஆஸ்திரேலியாஅணிக்கு வார்னர், ஸ்டீவன் ஸ்மித் திரும்பி உள்ளதால் கடும் சவால் இருக்கும்.

இதனிடையே முக்கிய வீரரான ஸ்டீவன் ஸ்மித் விக்கெட்டை எடுக்க இந்திய பவுலர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை வழங்கி உள்ளார். ஸ்மித் வித்தியாசமான பேட்டிங் டெக்னிக்கை கொண்டவர். பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட்டில், பேட்ஸ்மேன்களுக்கு ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே, அதாவது 4வது ஸ்டம்ப் லைனில் வீசவேண்டும் என்போம். ஆனால் ஸ்மித் நகர்ந்துகொண்டே இருப்பதால், அவருக்கு அந்த லைனில் வீசக்கூடாது. அதைவிட நான்கு அல்லது ஐந்து இன்ச்சுகள் விலக்கியே வீச வேண்டும். அவருக்கு ஆஃப் திசையில் கூடுதலாக நகர்த்தியே வீச வேண்டும். இதற்கு மனரீதியான அட்ஜெஸ்ட்மெண்ட் தான் முக்கியம், என தெரிவித்துள்ளார்.

Tags : Steven Smith ,Australian , Tendulkar tips Australian wicketkeeper Steven Smith to take wickets
× RELATED டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்...