×

ஐஎஸ்எல் கால்பந்து: கோவா-மும்பை சிட்டி இன்று மோதல்

கோவா: 11 அணிகள் பங்கேற்றுள்ள 7வது ஐஎஸ்எல் கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. நேற்று இரவு நடந்த 5வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்சி-ஜாம்ஷெட்பூர் எப்சி அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே அனிருத் தபா கோல் அடித்து சென்னைக்கு முன்னிலை ஏற்படுத்தினார். 25வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி சென்னையின் இஸ்மா கோல் போட்டார். இதனால் 2-0 என சென்னை முன்னிலை வகித்தது. 37வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் வீரர் வல்ஸ்கிஸ் தலையால் முட்டி அபாரமாக கோல் அடித்தார். முதல் பாதியில் 2-1 என சென்னை முன்னிலை வகித்தது. 2வது பாதியிலும் இரு அணி வீரர்களும் கடுமையாக போராடியும் கோல் அடிக்க முடியவில்லை.

இதனால் 2-1 என கோல் கணக்கில் சென்னை வெற்றி பெற்றது. இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 6வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா-மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதுகின்றன. மும்பை முதல் போட்டியில் கவுகாத்தியிடம் தோல்வி கண்டது. கோவா பெங்களூருவிடம் 2-2 என டிரா கண்டது.
இதனால் வெற்றிகணக்கை தொடங்க இரு அணிகளும் தீவிரம் காட்டும். இரு அணிகளும் இதுவரை 14 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் கோவா 7, மும்பை 4 போட்டிகளில் வென்றுள்ளன. 3 போட்டி டிராவில் முடிந்துள்ளது.

Tags : Goa ,Mumbai City , ISL Football: Goa-Mumbai City clash today
× RELATED கோவா வந்தது சீரம் இன்ஸ்டிடியூட் ஆப்...