×

ரூ28 கோடி உள்ளீட்டு வரி மோசடி: அரியானாவில் 2 பேர் கைது

புதுடெல்லி: ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி கடன் மோசடிக்காக சத்தேந்திர குமார் சிங்க்லா என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறையில் உள்ளீட்டு வரி கடன் திரும்பப்பெறுதல் என்ற முறை உள்ளது. உள்ளீட்டு வரிக் கடன் என்பது உள்ளீடுகளில் செலுத்தப்படும் வரிக்கான  பணத்தைத் திரும்பப் பெறுவதாகும். இது ஜிஎஸ்டி கட்டணத்திற்கு பொறுப்பான இறுதி பெருக்கத் தொகையை உருவாக்கும். இந்த உள்ளீட்டு வரி கடனை பெறுவதற்காக போலியான ரசீதுகளின் மூலம் வரி ஏய்ப்பு செய்ததற்காக அரியானாவைச் சேர்ந்த விகாஸ் ஜெயின் என்பவரை ரோஹ்தக் மண்டல ஜிஎஸ்டி நுண்ணறிவு தலைமை இயக்குநரக அதிகாரிகள் கைது செய்தனர்.

சுமார் ரூ. 27.99 கோடி உள்ளீட்டு வரி கடன் மோசடிக்காக விகாஸ் ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜிஎஸ்டி நுண்ணறிவு தலைமை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட விகாஸ் ஜெயின் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டு, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே, இதே வழக்கில் சத்தேந்திர குமார் சிங்க்லா என்பவரை மண்டல ஜிஎஸ்டி நுண்ணறிவு தலைமை இயக்குநரக அதிகாரிகள் கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Haryana , Rs 28 crore input tax scam: 2 arrested in Haryana
× RELATED ‘மேடம் சீப் மினிஸ்டர்’ பட விவகாரம்;...