×

கொடுமுடி அருகே பரிதாபம்: கார் கவிழ்ந்து அண்ணன், தம்பி உள்பட 4 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு

மொடக்குறிச்சி: ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த வீரணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரகுநாத் (45), தாமோதரன் (50), கிருஷ்ணசாமி (52), முருகசாமி (55). இவர்கள் 4 பேரும் டெக்ஸ்டைல் தொழில் செய்து வந்தனர். இதில் தாமோதரன், கிருஷ்ணசாமி ஆகிய இருவரும் அண்ணன், தம்பி ஆவர். டெக்ஸ்டைல் தொழில் சம்பந்தமாக நூல் வாங்குவதற்கு கரூர் செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று மதியம் 4 பேரும் பெருந்துறையில் இருந்து காரில் கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். கார் கொடுமுடி அடுத்த பள்ளக்காட்டூர் அருகே சென்ற போது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இதில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : Kodumudi ,sister ,brother ,death , Tragedy near Kodumudi: 4 people including brother and sister were crushed to death when the car overturned
× RELATED கலெக்டர் சொன்னா சிஎஸ்ஆர் போடணுமா?...