×

தொடரும் கனமழை...!! செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 3,000 கன அடியாக அதிகரிப்பு; அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

செங்கல்பட்டு: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3000 கனஅடி நீர் திறக்கப்பட்டதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஏற்கனவே விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது நீர் திறப்பு 3000 கனஅடியாக உயர்ந்துள்ளது. சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ. பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர்மட்ட மொத்த உயரம் 24 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும்.

தற்போது, வடகிழக்குப் பருவமழையினாலும், கிருஷ்ணா நீர் வரத்தினாலும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து உள்ளபடியால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. ஏரியின் நீர்மட்டம் 22.00 அடியாக உயரும்போது, அணையின் வெள்ள உபரிநீர் வெளியேற்றும் ஒழுங்கு முறை வழிகாட்டுதலின்படி அணைக்கு வரும் நீர் வரத்து அவ்வாறே வெளியேற்றப்பட வேண்டும். இன்று  22.00 அடியை நெருங்குவதாலும் ஏரியின் நீர்வரத்து நொடிக்கு 4,027 கன அடியாகவும் உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் இன்று 12.00 மணியளவில்1,000 கன அடி திறக்கப்படுகிறது.

நீர்வரத்துக்கேற்ப படிப்படியாக நீர் வெளியேற்றம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மழை பொழிவு மேலும் அதிகரிக்கும் என்ற காரணத்தால் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவை ஆபத்தும் ஏதுமின்றி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.  அதன்படி தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு விநாடிக்கு 3000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 3000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags : Water opening ,Sembarambakkam Lake ,Adyar , Heavy rain to continue ... !! Additional 500 cubic feet of water opening in Sembarambakkam Lake; Warning to coastal people of Adyar
× RELATED அடையாறில் அரசு ஒப்பந்தக்காரர்...