பழநி கோயிலில் 2.61 கோடி வசூல்

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 67 நாட்களுக்கான உண்டியல் காணிக்கை எண்ணிக்கை மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் நேற்று நடந்தது. கோயில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், பழநி கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.இதில் ரொக்கப் பணமாக ரூ.2 கோடியே 61 லட்சத்து 53 ஆயிரத்து 480 கிடைத்தது. தங்கம் 757 கிராம், வெள்ளி 12,411 கிராம், வெளிநாட்டு கரன்சி 202 ஆகியவை கிடைத்தது. உண்டியல் எண்ணும் பணியை பழநி கோயில் செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி, துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர்.

நிவர் புயல் காரணமாக அரசு அறிவித்த பொது விடுமுறையால் இன்று நடைபெற இருந்த காணிக்கை எண்ணிக்கை ரத்து செய்யப்பட்டது.கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பழநி கோயிலில் மிக குறைவான பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் கடந்த 2 மாதங்களுக்கான உண்டியல் காணிக்கை ரூ.2 கோடிக்கு மேல் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: