அயோத்தியில் உள்ள விமான நிலையத்திற்கு ஸ்ரீராமரின் பெயரை வைக்க உத்தரப்பிரதேச மாநில அமைச்சரவை ஒப்புதல்

லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள விமான நிலையத்திற்கு ஸ்ரீராமரின் பெயரை வைக்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், அயோத்தியில் உள்ள விமான நிலையத்தின் பெயரை மரியாதா புருஷோத்தம் ஸ்ரீராம் என பெயர் மாற்றும் முடிவை அமைச்சரவை எடுத்துள்ளது.இதற்காக உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விமானப் போக்குவரத்துக்கு துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் லல் ஜிஹாத்தை குற்றமாக்கி புதிய அவசர சட்டத்தை அம்மாநில அமைச்சரவை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்தின்படி, விருப்பத்துடன் மதம் மாறுவதாக இருந்தால் 2 மாதங்களுக்கு முன்பே மாவட்ட கலெக்டரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

Related Stories:

>