×

செம்பரம்பாக்கம், அடையாறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு: அரசுக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் கடிதம்.!!!

சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 4027 கன அடி தண்ணீர் வருகிறது. கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 4027 கன அடி தண்ணீர் வருகிறது. 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது நீர்மட்டம் 21.55 அடியை எட்டியதால் பொதுப்பணித்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நண்பகல் 12 மணியளவில் முதல்கட்டமாக வினாடிக்கு 1000 கன அடிநீர் திறக்க உள்ளது.

எனவே, செம்பரம்பாக்கம் ஏரியின் மிகைநீர் அடையாறு ஆற்றின் வழியே கடலில் கலப்பதால் ஆற்றின் இருமடங்கிலும் உள்ள காணுநகர், சூளைப்பள்ளம், திடீர் நகர், அம்மன் நகர், பர்மா காலனி, ஜாபர்கான்பேட்டை, கோட்டூர்புரம், சித்ரா நகர்  மற்றும் அடையாறு ஆற்றை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அருகில் உள்ள சென்னை மாநகராட்சியின் நிவாரண மையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனமழை குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், செம்பரம்பாக்கம், அடையாறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அதிகாரிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்க தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. மேலும், சென்னை விமான நிலையத்தின் ஓடுதளங்களை முறையாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை பொதுப்பணித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். 2015-ம் சென்னை முழுவதும் வெள்ளம் சூழ்ந்திருந்த நிலையில் 30,000 கன அடி நீர் திடீரென திறக்கப்பட்டது. தற்போது 1,000 கனஅடி நீர் மட்டும் திறக்கப்பட உள்ளதால் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று கூறியுள்ளனர். நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக சென்னையில் 169 நிவாரண மையங்கள் தற்போது திறக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Adyar ,areas ,government. ,Central Water Resources Ministry , Sembarambakkam, Adyar areas likely to be flooded: Central Water Resources Ministry letter to the government. !!!
× RELATED அடையாறில் அரசு ஒப்பந்தக்காரர்...