காரைக்குடி: காரைக்குடியில் நிவர் புயல் காரணமாக பல்லவன் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வழக்கம் போல் ரயில் நிலையம் வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நிவர் புயல் காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் விரைவு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த தகவல் கிடைக்காததால் முன்பதிவு செய்த பயணிகள் ரயில் நிலையத்துக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.