×

டெல்டா பகுதிகளை நிவர் புயல் தாக்காது... கடைசி நேரத்தில் எதுவும் நடக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் 'ஸ்பெஷல்'வார்னிங்!

சென்னை: நிவர் புயல் தற்போது சென்னையில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ளது, கடைசி நேரத்தில் புயல் கரையை கடக்கும் பகுதி மாறுபடலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல், தீவிரப் புயலாக மாறியது. இது, அதிதீவிரப் புயலாக மாறி இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் அதிகாலை வரை காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது

இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் செய்துள்ள போஸ்டில், நிவர் புயல் தற்போது சென்னையில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ளது, கடைசி நேரத்தில் புயல் கரையை கடக்கும் பகுதி மாறுபடலாம். நிவர் புயலை கணிப்பது கடினமாக இருக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சி மையங்களின் கணிப்புப்படி இந்த புயல் காரைக்கால் - பரங்கிப்பேட்டை இடையே கரையை கடக்கலாம் என்று கூறியுள்ளனர். ஆனால் 24 மணி நேரத்தில் நிறைய மாற்றங்கள் நடக்கும்.

இந்த புயல் மொத்தமாக மேற்கு நோக்கி நகர்வதற்கு கொஞ்சம் மட்டுமே வாய்ப்பு உள்ளது. இதனால் டெல்டா பகுதிகளை இந்த புயல் கண்டிப்பாக தாக்காது. டெல்டாவில் லேசான மழை பெய்யும். ஆனால் புயல் தாக்காது. இதனால் டெல்டா மக்கள் அச்சம் கொள்ள வேண்டியது இல்லை. நிவர் புயல் பெரும்பாலும் புதுச்சேரி - சென்னை இடையே கரையை கடக்கும் . மகாபலிபுரம் - கல்பாக்கம் இடையே எங்காவது கரையாக கடக்கலாம். இன்று இரவு முதல் நாளை காலை இந்த புயலை கரையை கடக்கும்.

மகாபலிபுரத்திற்கும் - சென்னைக்கும் அவ்வளவு வித்தியாசம் இல்லை. இந்த புயலில் சின்ன மாற்றம் ஏற்பட்டு லேசாக வழி மாறினால் கூட சென்னையில் புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது. இந்த புயலை தடுக்கும் வகையில் காற்று மாற்றம் ஏற்படவில்லை என்றால்.. இந்த புயல் அதிக வேகம் பெறும். தானே புயலின் வேகத்தில் (140 கிமீ) அல்லது அதற்கும் அதிகமான வேகத்திலும் கூட இந்த புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது, எனத் தெரிவித்துள்ளார்.



Tags : storm ,Nivar ,delta areas , Nivar Storm, Weatherman, Warning
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...