காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேல் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன் :மு.க.ஸ்டாலின்

சென்னை : திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு:

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான திரு. அகமது பட்டேல் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களும் தி.மு.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: