ஒரே மாதத்தில் ஒரு கோடி கொரோனா கேஸ்கள்.. உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 6 கோடியை தாண்டியது!!

ஜெனீவா: உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியைத் தாண்டியுள்ளது.உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியை கடந்தது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4.14 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 14.13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 1.71 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.03 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா      -  பாதிப்பு- 1,29,55,007, உயிரிழப்பு -  2,65,891, குணமடைந்தோர் - 76,36,684

இந்தியா       -    பாதிப்பு - 92,21,998, உயிரிழப்பு -  1,34,743, குணமடைந்தோர் - 86,41,404

பிரேசில்       -    பாதிப்பு - 61,21,449, உயிரிழப்பு -  1,70,179, குணமடைந்தோர் - 54,76,018

பிரான்ஸ்     -     பாதிப்பு - 21,53,815, உயிரிழப்பு -   50,237, குணமடைந்தோர்  - 1,54,679

ரஷியா        -    பாதிப்பு - 21,38,828, உயிரிழப்பு -   37,031, குணமடைந்தோர்  - 16,34,671

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

ஸ்பெயின் -16,14,126

இங்கிலாந்து - 15,38,794

இத்தாலி - 14,55,022

அர்ஜென்டினா - 13,81,795

கொலம்பியா - 12,62,494

மெக்சிகோ - 10,60,152

ஜெர்மனி - 9,62,906

பெரு - 9,52,439

போலந்து - 9,09,066

ஈரான்- 8,80,542

தென்னாப்பிரிக்கா - 7,72,252

Related Stories: