வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் அதி தீவிர புயலாக நண்பகலுக்குள் வலுப்பெறும் : சென்னை வானிலை ஆய்வு மையம் அலர்ட்!!

சென்னை : வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் அதி தீவிர புயலாக நண்பகலுக்குள் வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குமரிக் கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக் கடலை ஒட்டிய கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் புயலாக (நிவர்) மாறியது. இதனால் தமிழகம், புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் நிவர் புயலானது 6 கி.மீ. வேகத்தில் நகரும் நிலையில் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே இன்றிரவு கரையை கடக்கிறது. இதன் காரணமாக புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் அதி தீவிர புயலாக நண்பகலுக்குள் வலுப்பெறும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நிவர் புயலால் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, திருவாரூர், புதுச்சேரியில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே நிவர் புயல் காரணமாக கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 10ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.அதிதீவிர புயல் உருவாகி உள்ளதை குறிக்கும் வகையில் 10ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல் நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 8ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் 9ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.

Related Stories: