×

கார்களை வாடகைக்கு எடுத்து விற்க முயன்ற இன்ஜினியர் கைது

ஆவடி: நெற்குன்றம் கோல்டன் ஜார்ஜ் நகரை சேர்ந்த பரந்தாமன்(30) என்பவரது கார் கடந்த 22ம் தேதி திருடுபோனது. புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிந்து  வியாசர்பாடி கென்னடி நகர் சரண்(23) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் டிப்ளமோ இன்ஜினியரான இவர் கால் டாக்சி டிரைவராக வேலை செய்து ஆவடி, திருநின்றவூர் ஆகிய இடங்களில் கார்களை வாடகைக்கு எடுத்து விற்க முயன்றது தெரியவந்தது.


Tags : Engineer , Engineer arrested for trying to rent and sell cars
× RELATED தனது கள்ளக்காதலியிடம் பழகியதால்...