தரையில் உள்ள இலக்கையும் அழிக்கும் பிரமோஸ் சோதனை வெற்றி

புதுடெல்லி: தரையில் உள்ள இலக்குகளை தாக்கி  அழிக்கக் கூடிய பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இந்தியா-ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் நீர்மூழ்கி கப்பல்கள், போர் கப்பல்கள், விமானம் மற்றும் தரை வழி மார்க்கமாக ஏவ கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ரேடார் அமைப்புகளின் பார்வையில் படாமல் தப்பக் கூடிய ருத்ரம்-I, பிரமோஸ் ஏவுகணைகள் 2022ல், ராணுவத்தில் இணைக்கப்பட உள்ளது.கடந்த இரண்டரை மாதங்களில் இந்தியா பல்வேறு கட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நடத்தி உள்ளது. இதன் தொடர்ச்சியாக, அந்தமான் நிகோபர் தீவுகளில் இருந்து நேற்று காலை 10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது.

இது, நிலப்பரப்–்புகளில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் படைத்தது. 290 கி.மீ. ஆக இருந்த இதன் இலக்கு தற்போது 400 கி.மீ. தூரமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த சூப்பர்சோனிக் ஏவுகணை ஒலியின் வேகத்தை விட மூன்று மடங்கு வேகமாக பாய்ந்து இலக்கை தாக்கி அழிக்க கூடியது. அடுத்த கட்டமாக, இன்னும் சில தினங்களில், இந்திய விமானப்படை, கப்பற்படை அவற்றிக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ரக சூப்பர்சோனிக் ஏவுகணைகளை விண்ணில் செலுத்தி பரிசோதிக்க உள்ளது.

Related Stories: