நாடு முழுவதும் 69,000 பெட்ரோல் பங்க்குகளில் எலெக்ட்ரிக் வாகனம் ரீசார்ஜ் வசதி

புதுடெல்லி: ‘நாடு முழுவதும் 69 ஆயிரம் பெட்ரோல் பங்குகளில் எலெக்ட்ரிக் வாகன ரீசார்ஜ் செய்யும் வசதி ஏற்படுத்தப்படும்,’ என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடந்த 9வது எலெக்ட்ரிக் வாகன மாநாட்டில் காணொலி மூலமாக கட்கரி பேசியதாவது: மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. 2 மற்றும் 3 சக்கர வாகனங்களின் பேட்டரிக்கான விலை, வாகன விலையில் இருந்து விலக்க அனுமதிக்கப்படுகிறது. மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க, நாடு முழுவதும் 69 ஆயிரம் பெட்ரோல் பங்குகளில் தலா ஒரு ரீசார்ஜிங் வசதி ஏற்படுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை உலகளாவிய ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான செயல்களை அரசு மேற்கொண்டுள்ளது என்றார்.

Related Stories:

>