சில்லி பாயின்ட்...

* டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் ரன் குவிப்பை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், இந்திய பந்துவீச்சாளர்கள் 5வது ஸ்டம்ப் இருப்பதாக நினைத்துக் கொண்டு அதை குறிவைத்து பந்துவீச வேண்டும் என்று முன்னாள் நட்சத்திரம் சச்சின் ஆலோசனை கூறியுள்ளார்.

* இந்திய துப்பாக்கிசுடுதல் வீரர், வீராங்கனை களுக்கான பயிற்சி முகாம் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், வெளிநாடுகளை சேர்ந்த பயிற்சியாளர்கள் முகாமுக்கு திரும்பியுள்ளனர்.

* ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற இந்திய வீரர்கள் வித்தியாசமான வியூகங்களை முயற்சிப்பது அவசியம் என்று முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஆர்.பி.சிங் வலியுறுத்தி உள்ளார்.

* கொரோனா தொற்று மீண்டும் வேகம் எடுத்திருந்தாலும், அடிலெய்டு டெஸ்ட் போட்டி (பகல்/இரவு, டிச. 17-21) திட்டமிட்டபடி நடைபெறும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைமை செயலதிகாரி நிக் ஹாக்லி உறுதி செய்துள்ளார்.

* காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா, அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மா இருவரும் தற்போது முழு உடல்

தகுதி பெறுவதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். எனினும், ஆஸ்திரேலிய அணியுடன் நடக்க உள்ள முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இவர்கள் பங்கேற்பது சந்தேகமே என தகவல் வெளியாகி உள்ளது. உடல்தகுதியை நிரூபித்தால் மட்டுமே கடைசி 2 டெஸ்டில் விளையாடுவதும் உறுதியாகும்.

* ஒரே சமயத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா - இங்கிலாந்து அணிகள் மோதும் தொடர்கள் நடக்க உள்ளது கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலை வெகுவாகத் தூண்டியுள்ளது. இதனுடன் லங்கா பிரிமியர் லீக் டி20 தொடரும் நடப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: