நிதி நிறுவனத்தில் ரூ.50 கோடி மோசடி கோவையில் தாய், மகள் கைது

கோவை: கோவை ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (52), இவரது மனைவி பத்மாவதி (45), மகள் சரண்யா (25) ஆகியோர் ஆன்லைன் மூலமாக ‘கிரீன் கிரஸ்ட்’ என்ற நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். டெபாசிட் பணத்திற்கு ஒரே ஆண்டில் இரு மடங்கு தொகை கிடைக்கும் எனக்கூறி பொதுமக்களிடம் வசூல் செய்தனர். சில மாதங்களிலேயே ஆயிரத்துக்கும் அதிகமானோர் பணத்தை டெபாசிட் செய்தனர். சுமார் 50 கோடி ரூபாய் அளவிற்கு டெபாசிட் குவிந்தது. ஆரம்பத்தில் சிலருக்கு இரு மடங்கு தொகை கொடுத்தனர். பின்னர் அவர்களிடம் பேசி, அதிகமான தொகையை மீண்டும் டெபாசிட்டாக பெற்றனர். பலருக்கு டெபாசிட் செய்த தொகை வழங்கப்படவில்லை. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கோவை நகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். 2 மாதத்திற்கு முன் மணிகண்டன் மற்றும் நிறுவன பங்குதாரர் சஞ்சய்குமார் (35) ஆகியோரை கைது செய்தனர். நேற்று முன்தினம் தலைமறைவாக இருந்த பத்மாவதி, சரண்யா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories:

>