வேளாண் சட்டம் எதிர்த்து போராட்டம் டெல்லி புறப்பட்ட விவசாயிகள் சிறைவைப்பு: போலீசை கண்டித்து சாலை மறியல்

திருச்சி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் நாளை (26ம்தேதி), நாளை மறுநாள் (27ம்தேதி) என 2 நாட்கள் இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெறுகிறது. தமிழகத்திலிருந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 500 விவசாயிகள் பங்கேற்கின்றனர். இதையொட்டி திருச்சியிலிருந்து அய்யாக்கண்ணு தலைமையில் 150 விவசாயிகள் நேற்று காலை ரயிலில் புறப்பட தயாராக இருந்தனர்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் நள்ளிரவு அதிரடியாக அய்யாக்கண்ணு வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை விவசாயிகளுடன் சிறை வைத்தனர். இதுகுறித்து அய்யாக்கண்ணு கூறுகையில், டெல்லிக்கு 150 விவசாயிகளும் பாதி தலையை மொட்டை அடித்து செல்ல முடிவு எடுத்தோம். ஆனால் போலீசார் இரவே வீட்டிற்கு வந்து உங்களை வீட்டு சிறையில் அடைக்கிறோம் என கூறிவிட்டனர் என்றார். வீட்டில் சிறை வைக்கப்பட்டதை கண்டித்து விவசாயிகள் அய்யாக்கண்ணு  தலைமையில் கரூர் பைபாஸ் சாலையில் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். 

Related Stories:

>