திருவொற்றியூர் கோயிலில் 29ம் தேதி சிறப்பு பூஜை: பொதுமக்களுக்கு அனுமதி

சென்னை: திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில் உதவி ஆணையர் சித்ரா தேவி வெளியிட்ட அறிக்கை: திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயிலில் பவுர்ணமி நாளான 29ம் தேதி மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் ஆதிபுரீஸ்வரருக்கு மஹா அபிஷேகம் மற்றும் புனுகு சாம்பிராணி தைலாபிஷேகம் நடைபெறும். 30ம் தேதி மற்றும் டிசம்பர் 1ம் தேதி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கவசமின்றி மூலவர் தரிசனம் செய்ய இயலும். டிச. 1ம் தேதியன்று இரவு 8 மணியளவில் அர்த்தஜாம பூஜைக்குப்பின் கவசம் மீண்டும் அணிவிக்கப்படும். கொரோனா தொற்று காரணமாக விழாவிற்கு வரும் வெளியூர் பக்தர்கள் அனைவரும் கொரோனா நோய் இன்மைக்கான சான்று கொண்டு வர வேண்டும். ஆதார் அட்டை நகல், முகக்கவசம் அவசியம்.

65 வயதிற்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய், இருதய நோய் போன்ற இணைநோய் கொண்டவர்கள் கர்ப்பிணி பெண்கள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர் வருகைபுரிவதை தவிர்க்க வேண்டும். நோய் அறிகுறி இல்லாத பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.  www.tnhrce.gov.in என்ற இணையதள முகவரியில் விரைவு தரிசனத்திற்கான கட்டணச்சீட்டினை முன்பதிவு செய்துகொள்ளலாம். நேரடியாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: