×

3 மாதத்தில் மீண்டும் பாஜ ஆட்சி; உத்தவ் தாக்கரே ஆட்சிக்கு சிக்கலா?... மத்திய அமைச்சர் பேச்சால் பரபரப்பு

அவுரங்காபாத்: மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த 3 மாதத்தில் மீண்டும் பாஜ ஆட்சி அமைய உள்ளதாக மத்திய அமைச்சர் ராவ் சாகேப் தன்வே தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் மேல் சபை தேர்தல் நடைபெற உள்ளதால், அவுரங்காபாத் மாவட்டம் பர்பானியில் உள்ள பட்டதாரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ராவ் சாகேப் தன்வே நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘அடுத்த 2 அல்லது 3 மாதங்களில் மகாராஷ்டிராவில் பாஜக மீட்டும் ஆட்சி அமைக்கும். பாஜக தொண்டர்கள் மகாராஷ்டிராவில் நம்முடைய ஆட்சி மீண்டும் வராது என நினைக்கவேண்டாம்.

இதற்கான பூர்வாங்க பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். தற்போது நடக்கவிருக்கும் மேல் சபை தேர்தல் முடிவுக்கு பின்னர் அதற்கான நடவடிக்கைகள் தொடங்கும். தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறோம்’ என்றார். மகாராஷ்டிராவில் தற்போது சிவசேனா தலைமையிலான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில பேரவை உறுப்பினர்கள் பாஜக அதிக பட்சமாக 105 இடங்களை கைவசம் வைத்துள்ளது. அடுத்த இடத்தில் சிவசேனா 56 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும், காங்கிரஸ் 44 இடங்களையும் வைத்துள்ளன.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் ராவ் சாகேப் தன்வே, அடுத்த 2 அல்லது 3 மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று பேசியிருப்பது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக கடந்த 11ம் தேதி பீகார் தேர்தல் முடிவுகள் வெளியான ஒரு நாள் கழித்து, மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் அளித்த பேட்டியில், ‘மகாராஷ்டிரா மாநிலத்தின் உத்தவ் தாக்கரே ஆட்சி நான்கு ஆண்டுகள் முழுமையாக நடக்காது’ என்றார். அப்போதிருந்தே, உத்தவ் தாக்கரே ஆட்சிக்கான கவுண்டன் தொடங்கியதா? என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.

Tags : BJP ,Uttam Thackeray , BJP rule again in 3 months; Is Uttam Thackeray in trouble with the government?
× RELATED சாலை விதியை கடைப்பிடித்தவருக்கு ரோஜாபூ, இனிப்பு கொடுத்து வரவேற்பு