நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ஆக்ரமிப்பு கடைகள் அகற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றி வருகிறது. மேலும் செட்டிக்குளம் ஜங்சன் முதல் கோட்டார் சவேரியார் ஆலயம் ஜங்சன் வரை சாலை விரிவாக்கம் செய்யும் பணியும் நடந்து வருகிறது. மாநகர பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கட்டிடங்கள், கடைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி ஆணையர் ஆஷாஅஜித் உத்தரவிட்டுள்ளார். நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி முன்பு ஆக்கிரமிப்பு இடத்தில் ஒரு டீ கடை, இட்லிகடை செயல்பட்டு வந்தது.

இந்த கடைகளை அகற்ற ஆணையர் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் நகர அமைப்பு ஆய்வாளர் கெபின்ஜாய் தலைமையில் அதிகாரிகள் இன்று காலை பொக்லைன் இயந்திரம் உதவியுடன் அந்த இரு கடைகளையும் அகற்றினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: