உத்தர பிரதேசத்தில் சட்டவிரோத மதமாற்றத்திற்கு எதிராக 'லவ் ஜிகாத்'அவசர சட்டம் கொண்டுவர அமைச்சரவை முடிவு; சித்தார்த் நாத் சிங்

போபால்: உத்தர பிரதேச மாநில அமைச்சரவை சட்டவிரோத மதமாற்றத்திற்கு எதிராக அவசர சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. ஒரு பெண்ணை காதலித்து, அவரை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து, மணம் புரிவதை, லவ் ஜிகாத் என்கின்றனர். மதம் மாறாத பெண்களை கொலை செய்வது, ஆசிட் வீசுவது போன்ற கொடூர சம்பவங்கள் நடக்கின்றன. ஹரியானாவில், 21 வயது மாணவி, மதம் மாற சம்மதிக்காததால், அவரை காதலன் சுட்டுக் கொன்ற சம்பவம், நாடெங்கும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் கட்டாய மத மாற்றம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உத்தர பிரதேச மாநில அமைச்சரவை கூட்டத்தில் சட்டவிரோத மதமாற்றத்திற்கு எதிராக அவசர சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில கேபினட் மந்திரி சித்தார்த் நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்த சட்டப்படி, ஒருவரை திட்டமிட்டு காதலித்து, பின், கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து, திருமணம் செய்தால், அந்த திருமணம் செல்லாது. அனுமதிஅவ்வாறு திருமணம் செய்தவரை, ஜாமினில் வர முடியாத சட்டப் பிரிவின் கீழ் கைது செய்து, ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க, இந்த சட்டம் வகை செய்யும்.

Related Stories: