விருதுநகர் பகுதியில் கோழிக்கொண்டை பூ விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம்

விருதுநகர்: விருதுநகர் அருகே உள்ள கிராமங்களில் கோழிக்கொண்டை பூ விவசாயம் அதிகளவு நடைபெற்று வருகிறது. குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டும் தொழிலாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தண்ணீர் செலவும் அதிகம் தேவைப்படாத நிலையில் பராமரிப்பு செலவும் இல்லை என்பதால் கோழிக்கொண்டை பூ விவசாயத்தை அதிகம் விரும்புகின்றனர். இதுகுறித்து அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்ற ராமசாமி கூறுகையில், ``கடம்பன்குளம் கிராமத்தில் வசித்து வரும் நான் 2 ஏக்கர் நிலத்தில் கோழிக்கொண்டை பூ விவசாயம் செய்து வருகிறேன்.

நான் தமிழ்நாடு போக்குவரத்து துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையில் எனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் கோழிக்கொண்டை பூ விவசாயம் செய்து வருகிறேன். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் பூக்கள் நல்ல முறையில் பூத்து வருகிறது. ஒரு ஏக்கருக்கு 40 கிலோ பூ கிடைக்கிறது. விருதுநகர் மார்க்கெட்டில் கோழிக்கொண்டை பூ 60 ரூபாயிலிருந்து 80 ரூபாய் வரைக்கும் விற்பனையாகிறது. நல்ல விளைச்சல் இருக்கும் பூவினால் லாபம் ஈட்டி வருகிறோம்’’ என்றார்.

Related Stories:

>