பாட்டி சொன்ன கதைபோல் பாட்டிலில் கல் போட்டு தண்ணீர் பருகிய காகம்!

அனைவர்க்கும் தெரிந்த பொதுவான கதைகளில் ஒன்று காகம் தண்ணீர் குடித்த கதை. தாகத்தோடு அலைந்த காகம் ஒன்று பானையில் அடியில் இருக்கும் தண்ணீரை மேலே கொண்டுவருவதற்காக கற்களை மண்பானையில் உள்ளே போட்டு அதிக கற்கள் சேர்ந்த பின்னர் தண்ணீர் மேலே வர பின்னர் காகம் அந்த தண்ணீரை குடிக்கும். புத்திசாலி காகத்தின் கதை என்று இந்த கதை பெரும்பாலும் அனைவர்க்கும் கதையாகத்தான் தெரியும்.

ஆனால் இது தற்போது நிஜத்தில் நடந்துள்ளது. நல்ல நண்பன் என்ற டிவிட்டர் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ள டிவிட்டர் பதிவில் காகம் ஒன்று அங்கு வைக்கப்பட்டிருக்கும் பாட்டிலில் இருக்கும் தண்ணீரை குடிப்பதற்காக பாட்டில் உள்ளே கற்களை போட்டு தண்ணீரை மேலே வரவைத்து குடித்துச்செல்கிறது. தற்போது இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

Related Stories:

>