×

டெல்டா மாவட்ட பகுதிகளில் ‘‘ஆழ்கடலில் எண்ணெய்க்கிணறா எனக்கு தெரியவே தெரியாதே’’அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி

மயிலாடுதுறை: டெல்டா பகுதிகளில் ஆழ்கடலில் எண்ணெய் கிணறு அமைப்பது பற்றி எனக்குத் தெரியாது என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார். மயிலாடுதுறையில் உள்ள காமாட்சியம்மன் கோயிலில் செய்ய தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தரிசனம் செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகு டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளை பாதிக்கும் எந்ததிட்டத்தையும் இப்பகுதியில் அனுமதிக்கமாட்டோம்.

டெல்டா கடற்கரையோர ஆழ்கடலில் எண்ணெய்க்கிணறு அமைப்பது குறித்து எனக்குத்தெரியாது தெரிந்தபிறகு கூறுகிறேன். திருச்சியில் எம்.கே.டி. வாழ்ந்து மறைந்த ஊரில் மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அதற்கான திறப்பு விழா நடைபெற உள்ளது என்றார்.

Tags : Minister Rajendrapalaji ,oil well ,districts ,Delta ,sea , Interview with Minister Rajendrapalaji 'I don't know if there is oil well in the deep sea' in Delta districts
× RELATED தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும்