நெருங்கும் நிவர் புயல்; நாளை மாலை 145 கி.மீ. வேகத்தில் கரையை கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: நாளை மாலை நிவர் புயல் 140 - 145 கி.மீ. வேகத்தில் கரையை கடக்கு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் இன்று நிவர் புயலாக மாறியது. இந்த புயல் நாளை மாலை காரைக்கால் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. பல மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை மாலை நிவர் புயல் 140 - 145 கி.மீ. வேகத்தில் கரையை கடக்கு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நாளை மாலை நிவர் புயல் 140 - 145 கி.மீ. வேகத்தில் கரையை கடக்கும். அடுத்த 12 மணி நேரத்தில் மாமல்லபுரம் நிக்கி நிவர் புயல் நகரக்கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 26 வரை பலத்த காற்று, மழை பெய்யும். நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை சேதம் இருக்கும். காரைக்கால், புதுச்சேரியில் சேதங்கள் அதிகமாக இருக்கும்.

மன்னார் வளைகுடா, தென்கடலோர மாவட்டங்களில் நாளை மதியம் முதல் பலத்த காற்று வீசும். தென்கடலோர மாவட்டங்களில் 65- 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். நாளை கடலூர், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, விழுப்புரம், தி.மலை, செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும். தமிழகம், புதுச்சேரி, ஆந்திர கடல் பகுதிகளிலும் 14 அடி உயரத்திற்கு அலைகள் எலும்பும் என குறிப்பிட்டுள்ளது.

Related Stories: