×

“ஸ்புட்னிக் வி” கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றி: விரைவில் பயன்பாட்டிற்கு வரும்..!! ரஷ்யா அறிவிப்பு

மாஸ்கோ: ஸ்புட்னிக்-V கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றி பெற்றிருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகள் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் சோதனையில் இறங்கி உள்ள நிலையில் ரஷ்யா அதில் முதன்மையாக விளங்கி வருகிறது. உலக மக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வரும் கொரோனா பெருந்தொற்றுக்கு தடுப்பு மருந்தினைக் கண்டுபிடிக்க, உலகின் பல்வேறு நாடுகளும் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அவற்றில் முன்னதாக அமெரிக்காவின் பிபைசர், மாடர்னா மற்றும் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தடுப்பு மருந்துகள் பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு முடிவுகள் அறிவிக்கப்பட்டு 95% வரை வெற்றி இலக்கை எட்டியுள்ளன.

இந்நிலையில் ஸ்புட்னிக்-V கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றி பெற்றிருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசியை உருவாக்கும் டெவலப்பர்கள், இன்று இந்த தடுப்பூசியின் மருத்துவ சோதனை தரவு குறித்து நடத்தப்பட்ட இரண்டாவது இடைக்கால ஆய்வில் இந்த தடுப்பூசி 95% வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடு 42 நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்ட டோஸுக்குப் பிறகு சேகரிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது.

ஏற்கனவே, அமெரிக்காவின் பைசர், மாடர்னா மற்றும் பிரிட்டன் ஆக்ஸ்போர்டு ஆகியவற்றின் தடுப்பு மருந்து 95 சதவீதம் வரை வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், இந்த தடுப்பூசி இடைக்கால சோதனை முடிவுகளின்படி, கொரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாப்பதில் 92% வெற்றி பெற்றுள்ளது என்று  தெரிவித்திருந்தது. கமலேயா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட “ஸ்புட்னிக் வி” அடினோவைரஸ் திசையன் சார்ந்த தடுப்பூசி ஆகும். இதனை, ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்துடன் இணைந்து கடந்த ஆகஸ்ட் 11 அன்று பதிவு செய்யப்பட்டது.

Tags : announcement ,Russia , Sputnik V Corona Vaccine 95% Successful: Coming Soon .. !! Russia announcement
× RELATED கொரோனா தடுப்பூசியால் பாதிப்பில்லை