டெல்லி: நாட்டின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிப்பதாக கூறி 43 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு, இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பொது அமைதிக்கு குந்தகமாகவும் செயல்பட்டதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை/டிக்டாக், பப்ஜி உள்ளிட்ட சீனாவின் செயலிகளுக்கு ஏற்கனவே அரசு தடை விதித்துள்ளது. AliExpress, Alipay Cashier, WeTv, AliSuppliers App, Alibaba Workbench, Lalamove India, Drive With Lalamove India Snack Video Camcard, Camcard BCR Western, solu, Chinese Social, Date in Asia, We Date, Free Dating App, Adore App போன்ற செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளது.