நிவர் புயல் முன்னெச்சரிக்கை: தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 24 ரயில்களை இருமார்கத்திலும் நாளை ஒருநாள் ரத்து செய்தது தெற்கு ரயில்வே

சென்னை: நிவர் புயல் காரணமாக தென்மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களும் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் 24 ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாக அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து இருமார்க்கத்திலும் இயக்கப்படும் 24 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்பணிவு செய்த முழுத் தொகையும் திரும்ப வழங்கப்படும் என்றும் ரயில்வே அறிவித்துள்ளது.

நாளை அதீதிவிர புயலாக கரையை கடக்கும் என்பதால் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தருச்சி, மதுரை, காரைக்குடி, செங்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கொல்லம், ராமேஸ்வரம், ஆகிய மாவட்டத்திற்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று ஏற்கனவே தஞ்சை செல்லும் உழவன், சோழன் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. கடந்த 3 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலைகொண்ட நிவர் புயல் தற்போது 5 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

Related Stories: