நிவர் புயல் தாக்கினால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன?: மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தம் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தற்போது நிவர் புயலாக உருவாகியுள்ளது.

சென்னைக்கு கிழக்கே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. காரைக்கால் - மாமல்லபுரம் இடையே நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என்றும் அப்போது மணிக்கு 100 முதல் 120 கிமீ வேகத்தில் காற்று வீசும். மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நிவர் புயலை எதிர்கொள்ள மாநில பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நிவர் புயல் தாக்கினால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளர்.

இதற்கிடையே, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அரசுப்பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அரசு ​ஊழியர்கள், கல்வித்துறை பணியாளர்கள் வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரிடர் பணிகளில் ஈடுபடாத அரசு ஊழியர்கள் மதியமே வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: