நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் 27 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 11 பாலங்களை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை  சார்பில் கள்ளக்குறிச்சி, திருவாரூர், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, நாமக்கல், கடலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 27 கோடியே  16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 11 பாலங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிமலை - மூலக்காடு -புதூர் சாலையில், லக்கிநாயக்கன்பட்டியில் முஸ்குந்தா ஆற்றின் குறுக்கே 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள  பாலம் மற்றும், திருவாரூர் மாவட்டத்தில் மாப்பிள்ளைக்குப்பம் - ஆனைக்குப்பம்- செல்வபுரம் சாலையில், மாப்பிள்ளைக்குப்பத்தில் 2 கோடியே

25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் திறக்கப்பட்டது. மேலும் ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை -மாக்கிணான்கோம்பை சாலையில், மீனவர் காலனியில் 2 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள  பாலத்தை திறந்து வைத்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் கவுண்டநாயக்கன்பாளையம் - போயம்பாளையம் சாலையில் கவுண்டநாயக்கன்பாளையத்தில் 1 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் அவிநாசி வட்டம், சேலம் - கொச்சி சாலையில் அவிநாசி - திருப்பூர் - பல்லடம் - பொள்ளாச்சி - கொச்சி சாலையில் பெரியாயிபாளையத்தில் 1 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 2 பாலங்கள் திறக்கப்பட்டன.

கோயம்புத்தூர்  மாவட்டத்தில் துடியலூர் சின்னதடாகம் சாலையில், இந்திரா நகரில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள  பாலம், நீலகிரி  மாவட்டத்தில்  தும்மனட்டி - கூ.மணிஹட்டி சாலையில், தும்மனாடாவில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், நாமக்கல் மாவட்டத்தில் சௌரிபாளையம் - பொரசல்பட்டி சாலையில்,  சௌரிபாளையத்தில் 4 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்  கட்டப்பட்டுள்ள  பாலம் திறக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் மாத்தூரில், பூவனூர் - வீரரெட்டிக்குப்பம் சாலையில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், காட்டுஒடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 2 பாலங்கள் திறக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பாப்பநாடு - மதுக்கூர் - பெருகவாழ்ந்தான் சாலை, சொக்கனவூரில் 4 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், என மொத்தம் 27 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 11 பாலங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். மேலும் நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் வி.சரோஜா, தலைமைச் செயலாளர் சண்முகம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திக், தலைமைப் பொறியாளர் சாந்தி, தலைமைப் பொறியாளர் ,எம்.கே. செல்வன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: