×

3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்: அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக உருவெடுக்கும் நிவர்: 7 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: 3 மணி நேரமாக ஒரே இடத்தில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த நிவர் புயல் தற்போது ஒரே இடத்தில் நங்குரமிட்டு நிற்கிறது என கூறியுள்ளது. புதுவையிலிருந்து 410 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 450 கி.மீ. தொலைவிலும் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. புயல் காற்றின் வேகம் மணிக்கு 150 கி.மீ. வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் அதிதீவிர புயலாக உருவெடுக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசை நோக்கி நிவர் புயல் நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே நாளை மாலை கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் உருவானதை அடுத்து சென்னை முதல் காரைக்கால் வரை கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. சிதம்பரம் பரங்கிபேட்டையில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடல் சீற்றத்துடன் பலத்த காற்று வீசுவதால் படகுகள் சேதம் அடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூரில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சை, நாகை, திருச்சி, திருவாரூர், மயிலாடுத்துறை, காரைக்காலில் இன்று அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களில் 100-110 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags : storm ,Nivar ,districts , For 3 hours, in one place, Nivar storm
× RELATED மிக்ஜாம் புயல் வெள்ளத்தால்...