×

2015 வெள்ளத்துக்கு பின்னரும் பாடம் கற்கவில்லை: விதி மீறல் கட்டிடங்கள் தொடர்பான வழக்கில் அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்.!!!

சென்னை: விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடம் தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னைச் சேர்ந்த வழக்கறிஞர் ரூக்மன் காதர் என்பவர் சென்னை  உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில தகவல்கள் பெறப்பட்டதாகவும், குறிப்பாக ராயபுரம் மண்டலத்தில் மட்டும் விதிகளை மீறி 5,674 கட்டடங்கள்  கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 1161 கட்டிட பணிகளை நிறுத்தி வைக்கப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும்,  679 விதி மீறல் வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், 115 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இது போன்று கட்டிடங்கள் அதிகரித்து வருவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். சென்னை முழுவதும் 75,000 முதல் 1,00,000 வரை விதி  மீறல் கட்டிடங்கள் இருக்கலாம் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, விதிமீறல் கட்டடங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க பல்வேறு சட்டங்கள் உள்ளதாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு கண்டனம்  தெரிவித்தனர்.

கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்துக்கு பின்னரும் கூட அதிகாரிகள் இன்னமும் பாடம் கற்கவில்லை என்று வேதனை தெரிவித்த நீதிபதிகள், தலைமைச்செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் ஆகியோர் நேரில் ஆஜராக நேரிடும் என்றும் எச்சரித்தனர். மேலும், வழக்கு தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர், ராயப்புரம் மண்டல உதவி ஆணையர் ஆகியோர் டிசம்பர் 22-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.


Tags : floods ,government ,buildings. ,Chennai High Court , No lessons learned after 2015 floods: Chennai High Court condemns govt in building case
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி