×

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வருகிறார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து முடிவெடுக்க நேரில் ஆளநரிடம் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 7 பேரை விடுவிக்க தமிழக அரசு பரிந்துரைத்து 2 ஆண்டு ஆகியும் ஆளநர் முடிவெடுக்காத நிலையில் சந்திப்பு நடைபெற்று வருகிறது. 2 ஆண்டுகள் ஆன நிலையில் மேலும் தாமதம் செய்யக்கூடாது என ஸ்டாலின் நேரில் வலியுறுத்தியுள்ளார். தன்னை விடுவிக்க பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் ஆளுநர் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்தது. பேரறிவாளன் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது அவருக்கு ஒரு வாரம் பரோலை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தன்னை விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கால் ஆளுநருக்கு நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது என சிபிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தகவல் அளிக்கப்பட்டது. விடுதலை தொடர்பாக ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும் என சிபிஐ உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. பல்நோக்கு விசாரணைக்கும், பேரறிவாளனுக்கும் தொடர்பு இல்லை என உச்சநீதிமன்றத்தில் தொடர்பு இல்லை என சிபிஐ விளக்கம் அளித்திருந்தது. பேரறிவாளன் தொடர்பாக விடுவிப்பது தொடர்பாக ஆளுநர் ஆலோசிக்கவில்லை, அதற்கு அவசியமும் இல்லை என சிபிஐ தரப்பில் வாதம் செய்யப்பட்டது. எனவே பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விரைவில் விடுதலை செய்ய முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சந்திப்பு நடைபெற்றது.

Tags : MK Stalin ,DMK ,Governor ,persons ,Tamil Nadu ,Banwarilal Purohit ,release ,Perarivalan , Meeting with Perarivalan, Liberation, Banwarilal Purohit, MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...