×

தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக குறைவு: சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.832 குறைந்து ரூ.37,152-க்கு விற்பனை.!!!

சென்னை: சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக குறைந்து வருகிறது. வாரத்தின் முதல் நாளான நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.37,984-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று மீண்டும் விலை குறைந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.104 குறைந்து ஒரு கிராம் ரூ.4,644-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்து ரூ.37,152-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் தங்கம் விலை உயர்ந்த நிலையில், இந்த வாரம் தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக குறைந்து வருவது நகை பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Chennai , Gold prices fall for second day in a row: Gold in Chennai fell by Rs 832 to Rs 37,152 per razor.
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...